Trichy | "வழக்கை வாபஸ் வாங்கு" - வீடு புகுந்து அரிவாளுடன் மிரட்டிய அதிர்ச்சி வீடியோ
"வழக்கை வாபஸ் வாங்கு" - வீடு புகுந்து அரிவாளுடன் மிரட்டிய அதிர்ச்சி வீடியோ,திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், வீடு புகுந்து அரிவாளுடன் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநிலச் செயலாளராகவும், பஞ்சமி நில மீட்பு குழு தலைவராகவும் இருந்த சண்முகசுந்தரம் என்பவர் கடந்த 2023ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் போலீசார் உரிய விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சண்முகசுந்தரத்தின் மகன் நித்தியானந்தன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி, நித்தியானந்தம் வீட்டில் இருந்தபோது, கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட நான்காவது நபரான சண்முகவேல் என்பவர், வழக்கை வாபஸ் பெறக்கோரி அரிவாளுடன் வந்து மிரட்டியதாக காவல்நிலையத்தில் நித்தியானந்தன் புகார் அளித்த நிலையில், அதுகுறித்த காட்சிகள் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.