வழிவிடுவதில் தகராறு - கார் ஓட்டுநரை காலணியால் தாக்கிய திருநங்கைகள்
சென்னை திருவொற்றியூர் அருகே காரில் வந்த நபருக்கும் டூவீலரில் வந்த திருநங்கைகளுக்கும் வழி விடுவதில் தகராறு ஏற்பட்டது. இதில் காரில் வந்த நபரை, திருநங்கைகள் இருவர் காலணியாலும், கைகளாலும் கடுமையாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.