கணவர் குடும்பமே தந்த டார்ச்சர்.. இளம் பெண் வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி புகார்
திருப்பத்தூரில் மாமனார் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், தனது கணவர் விவாகரத்து வழக்கை வாபஸ் பெறக்கோரி தாக்குவதாகவும் மனைவி புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை அருகே 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த இளம்பெண் ஒருவர், கணவர் மதுபோதைக்கு அடிமையானதாக கூறி அவரை பிரிந்து வாழ்ந்து வருவதோடு, சித்ரவதை செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும், மாமனார் குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.
இந்த சூழலில், தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு ஆட்களை ஏவி கணவர் தரப்பினர் தன்னை தாக்குவதாகவும் வீடியோ ஆதாரத்துடன் அந்த பெண் குமுறியுள்ளார்.