Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18.10.2025) | 7 PM Headlines | ThanthiTV
- வங்க கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.. இன்று முதல் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது...
- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... 21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
- தீபாவளி அன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... மயிலாடுதுறை, நாகை, திருவாரூரிலும் கனமழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது...
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்... குழந்தைகளுடன் வந்து விதவிதமான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்...
- தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 353 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன... பாதிக்கப்படும் இடங்களுக்கு 4 நிமிடங்களில் ஆம்புலன்ஸ்கள் செல்லும் வகையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது...