Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30.09.2025) | 7 PM Headlines | ThanthiTV

Update: 2025-09-30 14:18 GMT
  • கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய், வீடியோ வெளியிட்டு முதல்முறையாக மனம் திறந்துள்ளார்...தனது வாழ்வில் இப்படி வரு வலி நிறைந்த சூழ்நிலையை எதிர்கொண்டது இல்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்... 
  • அரசியல் காரணங்கள் தவிர்த்துவிட்டு, மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து அனுமதி கேட்டதாகவும், ஆனால் நடக்க‌க் கூடாத‌து நடந்துவிட்டதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்...
  • கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் என்.ஆனந்த், நிர்மல் குமார், முன்ஜாமின் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்... காவல்துறை கடமை தவறிவிட்டதாகவும், சம்பவத்தில் தவெகவினர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்....
  • கரூர் சென்று விரைவில் பாதிக்க‌ப்பட்ட மக்களை சந்திப்போம் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்...தனது தாயை இழந்த வேதனையை விட அதிக வேதனையடைந்த‌தாகவும், தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை என்றும் கூறினார்...
  • விஜய் வாகனத்தை சுற்றி பேரிகார்டு அமைக்கப்படவில்லை என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தரப்பு குற்றச்சாட்டியது...ஏராளமான தொண்டர்கள் வந்ததால் சமாளிக்க முடியவில்லை எனவும் கரூர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்