Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-10-2025) | 6PM Headlines | Thanthi TV
- தீபாவளி பண்டிகையை ஒட்டி, புத்தாடை வாங்க கடைவீதிகளில் குவியும் மக்கள்...குழந்தைகளுடன் சென்று புத்தாடைகள் வாங்கி வருகின்றனர்...
- நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது... புதுவரவாக வந்துள்ள பட்டாசுகள் மற்றும் இரவு நேர வெடிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்...
- மகிழ்ச்சிகரமான தீபாவளியை இனிப்புகளோடு கொண்டாட ஸ்வீட் கடைகளில் குவியும் மக்கள்... குடும்பத்துடன் வந்து விதவிதமான இனிப்புகளை வாங்கி செல்கின்றனர்...
- தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள்... கடந்த 3 நாட்களில் 1.22 லட்சம் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றன...
- தீபாவளியையொட்டி தலைநகர் டெல்லியில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து செல்கின்றனர்... காசிப்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன...