Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-10-2025) | 6PM Headlines | Thanthi TV

Update: 2025-10-10 13:00 GMT
  • வரும் 16 முதல்18 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. வடகிழக்கு பருவமழை இந்தாண்டு இயல்பை விட 50 செ.மீ. அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது...
  • நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு....சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
  • தீபாவளி தினத்தன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது... வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கில், உச்சநீதிமன்றத்தில் பரபரப்பாக வாதம் நடைபெற்றது.. கரூர் கூட்ட நெரிசல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக, உயிரிழந்த பாத்திமா பானுவின் கணவர் பிரபாகரன் தரப்பில் வாதிடப்பட்டது..
  • மலை கிராம பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது...மாற்றுத்திறனாளிகள் உடன் வருபவரும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது...
  • சாதி-மத வெறி, இந்தி திணிப்பு, மத்திய பா.ஜ.க அரசை எதிர்த்து தமிழ்நாடு போராடும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.... தமிழக ஆளுநர் ரவி, தனது நண்பர் தான் என்றும், தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார் எனவும் கூறினார்...
  • பாமக நிறுவனர் ராமதாஸை காட்சி பொருள் போல் பயன்படுத்துகின்றனர் என அன்புமணி விமர்சித்துள்ளார்... ராமதாஸை யாரும் சரியாக கவனிக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்...
Tags:    

மேலும் செய்திகள்