Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03.10.2025) | 6 PM Headlines | ThanthiTV

Update: 2025-10-03 13:15 GMT
  • கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமனம்... வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
  • கரூர் சம்பவத்தில் 2 பேர் கைதானதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.. வீடியோக்களை பார்க்கும் போது கடும் வேதனை ஏற்படுவதாகவும் நீதிபதி கூறினார்..
  • விஜய்யின் பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்..பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? எனவும் அதிருப்தி தெரிவித்தார்..
  • கூட்டத்தில் காலணி, ரசாயனங்களை எறிந்ததாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது...எச்சரிக்கையின்றி போலீசார் தடியடி நடத்தியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்..
  • எங்கள் தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை என ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது... வேண்டுமென்றே தாமதமாக வந்தது போல் கூறப்படுவதாகவும், FIR-ல் தவறான தகவல் உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்...
  • உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.. ஒருங்கிணைப்பாளர் என்றால் பொறுப்பு ஏற்க வேண்டும்தானே? எனவும் கூறினார்..

Tags:    

மேலும் செய்திகள்