Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2025) | 6 PM Headlines | Thanthi டிவி
தமிழகத்தின் 13 மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு....
எம்.டி மற்றும் எம்.எஸ் முதுகலை படிப்புகளில் கூடுதலாக 488 இடங்கள் ...
காமராஜர் பற்றிய சர்ச்சைக்குரிய மற்றும் வீண் விவாதங்களை தவிர்ப்போம்...
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்...
காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவா பேசியது கண்டனத்திற்குரியது...
பெருந்தலைவர் காமராஜர் பற்றி முதல்வர் ஸ்டாலினும், திமுகவும் பேசுவதெல்லாம் நகைமுரண் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா...
திருச்சி சிவாவின் வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது...
சென்னையை அடுத்த மாங்காட்டில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய தனியார் பள்ளி மாணவி லாரி மோதி படுகாயம் அடைந்த சம்பவம்
பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை எனக் கூறி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்...
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை....
ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தும் போலீசார்....
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்க உள்ள நிலையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன்...