Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11.06.2025) | 11PM Headlines | ThanthiTV

Update: 2025-06-11 17:57 GMT
  • திண்டுக்கல், தேனி திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு....
  • கோவை, நீலகிரியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை, நீலகிரிக்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை... கோவை மற்றும் நீலகிரிக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படை சென்றுள்ளதாக அறிவிப்பு...
  • தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளதால், 7 மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்...நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மழையை எதிர்கொள்ள வேண்டும் எனவும், பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு...
  • ஜூலை ஒன்றாம் தேதி முதல் தட்கல் ரயில் டிக்கெட்டுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்... ஆதார் அட்டை பெற்ற பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என, ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு...
  • கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு 13ம் தேதி 385 சிறப்பு பேருந்துகளும், 14ம் தேதி 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டம்...கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்வு... ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை...
  • விவசாயிகளுக்கு கடந்த ஆட்சி துரோகம் செய்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு... தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் உறுதி...
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட்... முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 43 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா...
  • ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு பகுதியில் லஞ்சம் வாங்கி கொண்டு தப்பியோடிய உதவி பொறியாளர்... பணத்தை வீசி எறிந்துவிட்டு ஓடிய நிலையில், விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்...
  • சென்னை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 13 பேரில் 6 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை வழக்கில் கைதான சிறுவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டதாக அறிவிப்பு...
Tags:    

மேலும் செய்திகள்