"இன்றும் நாளையும்.." திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்

Update: 2025-07-14 03:48 GMT

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, இன்றும், நாளையும் சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக திகழும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு, பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், இன்றும், நாளையும் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்கள் பொது தரிசனத்திலேயே, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்