TN DGP | Pocso | ``அந்த அதிகாரம்அவர்களுக்கு மட்டுமே’’ - தமிழகம் முழுக்க DGP அதிமுக்கிய சர்க்குலர்
போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யத் தேவையில்லை என தமிழக டிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.பாலியல் வன்கொடுமை குற்றம் தொடர்பான சட்டப்பிரிவுகள் இருந்தால் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யலாம் என்றும், பாலியல் வன்கொடுமை செய்யப்படாமல் குழந்தை காயமடைந்திருந்தால் அல்லது உடல்ரீதியான காயம் ஏற்பட்டிருந்தால், அந்தக் காயத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு மட்டும் மருத்துவப் பரிசோதனை நடத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குழந்தை அளித்த புகார் அல்லது பாதுகாவலரின் புகாரின் அடிப்படையில், பரிசோதனையின் தன்மை மற்றும் அளவைத் தீர்மானிக்கும் அதிகாரம் பரிசோதனை செய்யும் மருத்துவருக்கே உள்ளதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தை கர்ப்பமாகவோ அல்லது பிரசவித்திருக்கும் பட்சத்திலோ 13 பக்கப் பரிசோதனைப் படிவத்தின் முழு விவரங்களையும் நிரப்பத் தேவையில்லை எனவும், விவரங்களை உரிய முறையில் பதிவு செய்தால் போதுமானது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது தடயவியல் ஆய்வக அதிகாரிகள் கூறிய கருத்தின் அடிப்படையிலும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் இந்த உத்தரவு காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடந்த சாதாரண பாலியல் குற்றங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதன் மூலம் அந்த குழந்தை மன உளைச்சலுக்கு ஆளாவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளனர்.