இளைஞர் ஜெமினி கொலையில் திக்..திக் திருப்பம் - சவ ஊர்வல வண்டியால் இரையான கொடூரம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் முன் விரோதம் காரணமாக இளைஞரை, அவரது நண்பர்களே போதை ஊசி செலுத்தி கொலை செய்து ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியம் நகரை சேர்ந்த ஜெமினி என்பவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனால் ஜெமினியின் நண்பரான சுனிலை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சவ ஊர்வல வாகனத்தை எரித்த வழக்கிற்காக பழிவாங்கும் நோக்கில், கடந்த 28 ஆம் தேதி ஜெமினியை, சுனில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமான மது கொடுத்து போதை ஊசி செலுத்தி பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்து ஏரியில் வீசியது தெரியவந்தது. தொடர்ந்து சுனில் மற்றும் அவரது நண்பர் கார்த்தி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.