``SI மகன்னா என்ன வேணும்னா பண்ணுவியா?'' - கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட போலீஸார்
திருவண்ணாமலையில் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய போலீஸ் எஸ்.ஐ மகனை காவல்துறையினர் முகத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே இளைஞர் ஒருவர் மதுபோதையில் கார் ஓட்டியதில், சாலையோரத்தில் இருந்த கடை ஒன்று சேதமடைந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் காரை ஓட்டி வந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியதில், தான் காவல் உதவி ஆய்வாளரின் மகன் எனக்கூறி அவர் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். தொடர்ந்து, அவரை பிடித்த போலீசார் முகத்தில் அறைந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.