DMK | MLA | SHOE | தனது காலில் இருந்த ஷூவை உதவியாளரை சுமக்க வைத்த திமுக எம்.எல்.ஏ
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், அண்ணா நகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், மோகன் தான் அணிந்திருந்த ஷூவை கழட்டிய நிலையில் அதனை அவரின் உதவியாளர் கையில் எடுத்துச் சென்று காரில் வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.