நாளை திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம் - மின்னொளியில் ராஜகோபுரம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள, சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயில் ராஜகோபுரம் லேசர் விளக்குகளால் அலங்கறிக்கப்பட்டு, மின்னொளியால் ஜொலித்து வருகிறது. இந்த நிலையில், கோயிலில் பாதுகாப்பு பணிகள் மற்றும் பக்தர்கள் நெரிசலின்றி சென்று வருவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.