Palani Busstand | மாயமான மூன்று 7th மாணவர்கள்.. பழனியில் காத்திருந்த ட்விஸ்ட்

Update: 2025-06-29 03:58 GMT

வேலூர் மாவட்டம், தொரப்பட்டி பகுதியில் காணாமல் போன 3 மாணவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மீட்கப்பட்டுள்ளனர். ராம்சேட் நகர் பகுதியை சேர்ந்த மூன்று மாணவர்கள் ஏழாம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு மாணவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்ட நிலையில், மாணவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்