எதுவும் தெரியாமல் ரயிலில் தவித்த மூன்று குழந்தைகள்.. பல்லாவரம் ஸ்டேஷனில் அதிர்ச்சி
ஆதரவின்றி ரயிலில் பயணித்த மூன்று குழந்தைகள் மீட்பு
சென்னை மின்சார ரயிலில் யாரும் இல்லாமல் பயணித்த மூன்று குழந்தைகளை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயிலில் 2 பெண் குழந்தைகள் உட்பட மூன்று குழந்தைகள் தனியாக பயணித்துள்ளனர். பல்லாவரம் ரயில் நிலையத்தில் சோதனை செய்த பொழுது, ஆதரவின்றி பயணித்த மூன்று குழந்தைகளையும் ரயில்வே போலீசார் மீட்டு, பரங்கிமலை ரயில் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். குழந்தைகளுக்கு தங்களது பெயரை தவிர வேறு எதுவும் தெரியாததால், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்