24 மணி நேரமும் செயல்படும் புதிய நடைபாதை வளாகம்
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையில் 19.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடைபாதை வளாகம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, அகலமான நடைபாதைகள், பூங்காக்கள், பொதுமக்கள் அமருவதற்கான இருக்கை வசதி, குழந்தைகள் விளையாடும் இடங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளது. புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் கலை நிகழ்ச்சிகள், சாலை இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தும் வகையில் இந்த சாலை மாற்றி அமைக்கப்பட உள்ளது. மேலும், மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி, மற்றும் மின்சார வாகனங்களுக்கு சார்ச் மையம் உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெற உள்ளன. ராயபுரத்தில் உள்ள எம்.சி. சாலையும் இதே பாணியில் மாற்றியமைக்கப்பட உள்ளது குறிப்பிட தக்கது.