புகழ்பெற்ற தேவநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் வழிபாடு

Update: 2025-02-02 14:09 GMT

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 29ஆம் தேதி முதல் கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கோயில் கோபுர விமானத்தின் மீது புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு வழிபட்டனர். அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்ற பின்னர் சாமி தரிசனத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்