Thiruppuvanam Lockup Death | மொத்த கேஸையும் புரட்டி போட்ட CCTV - நிகிதாவை சுற்றிவளைத்த CBI
திருப்புவனம் அஜித் மரண வழக்கு - அதிர்ச்சிகர தகவல்
திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கில் நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது...
சிவகங்கை மாவட்டம் மடபுரத்திற்கு சாமி கும்பிட வந்த நிகிதாவின் காரில் இருந்த நகை திருட்டு சம்பந்தமான விசாரணையில்,
கோயில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமார் உயிரிழந்தார்.
ஜூன் 27ம் தேதி காலை 9 மணிக்கு கோயிலுக்கு வந்த நிகிதா, காரை பார்க் செய்யுமாறு அஜித்குமாரிடம் கூறி சாவியை கொடுத்ததாகவும்,
அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் அருணிடம் சாவியை கொடுத்து காரை கோயில் எதிரே உள்ள பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு 5 நிமிடத்தில் சாவியை நிகிதாவிடம் அஜித்குமார் கொடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
ஆனால் நிகிதா கொடுத்த புகாரில் கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தான் அஜித் தந்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும் காரை அஜித்குமாரும் அருணும் சேர்ந்து வடகரை வரை ஓட்டி சென்றதாக கூறப்பட்டது.
சிபிஐ அதிகாரிகளும் முதல் நாள் விசாரணையை வடகரையில் இருந்துதான் தொடங்கினர்.
வழிநெடுக உள்ள சிசிடிவி கேமராக்களில் கார் வந்ததாக தெரியவில்லை.
காரை நிகிதாவே ஓட்டிச் சென்று, மீண்டும் அவரே ஓட்டி வருவதாகவே பதிவாகி இருந்தது.
காரை பார்க் செய்து விட்டு ஐந்து நிமிடத்தில் சாவியை நிகிதாவிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீண்டும் பார்க்கிங்கில் இருந்து காரை பத்து நிமிடத்தில் எடுத்து வந்து கொடுத்துள்ளனர்.
எனவே கோயிலுக்கு நிகிதா காரில் வந்த பின் கோயிலை விட்டு கார் வெளியே எங்கும் செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.
புகார் அளித்த நிகிதா முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தது கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிகிதாவின் கார், பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
எனவே கோவிலில் இருந்தே நிகிதாவின் கார் எங்குமே செல்லாத நிலையில், நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.