இரண்டு கைகளிலும் திரிசூலத்தை குத்தி திருப்பரங்குன்றத்திற்கு ஸ்டார் காவடி எடுத்து வந்த பக்தர்
தைப்பூசத்தை முன்னிட்டு முருக கடவுளின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் அலைகடலென திரண்டு தரிசனம் செய்தனர். அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றத்திற்கு ஜெயந்திபுரத்தை சேர்ந்த பக்தர், இரு கைகளிலும் ஆணிக்கு பதிலாக திரிசூலத்தைக் குத்தி ஸ்டார் காவடி எடுத்து வந்தது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. இதேபோல் மற்றொரு பக்தரும், பறவை காவடியுடன் வந்து நேர்த்தி கடன் செலுத்தினார்.