"நீங்க பாத்துவுட்ட வேல.. யாரும் தர்பூசணி சாப்ட மாட்றாங்க" சாபம் விடும் விவசாயிகள்

Update: 2025-04-08 03:06 GMT

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஏக்கருக்கு 70 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த தர்பூசணி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால், தர்பூசணி விற்பனை பாதிப்படைந்தது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் தர்பூசணி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதிகாரிகளின் கருத்தால் தர்பூசணி பழங்களை யாரும் கொள்முதல் செய்வதில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்