தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதற்காக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார், பேரணி செல்வதற்கு முன்கூட்டியே குண்டுக்கட்டாக கைது செய்தனர். மேலும், அவர்களை கைது செய்து வலுக்கட்டாயமாக, தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளதற்கு பிற மாற்றுத்திறனாளிகள் உட்பட பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல, சேப்பாக்கம், மெரினா, எழிலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் பேரணியாக செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகளை தடுத்து நிறுத்திய போலீசார், குண்டு கட்டாக அவர்களை கைது செய்தனர். முதல்வர் சட்டப்பேரவை கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் திரண்ட மாற்றுத்திறனாளிகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.