தேனியில் முதியவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிலம் மற்றும் பணப் பிரச்சனை தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு ராதாகிருஷ்ணன் என்ற முதியவரை, மாரிமுத்து, சுரேஷ்குமார் மற்றும் மதன்குமார் ஆகியோர் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் தற்போது கொலை செய்த மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.