Family Fight | 12th Student | ``இங்க எப்படி கட்டலாம்..’’ - 12ம் வகுப்பு மாணவன் அடித்தே கொலை
விழுப்புரம் மாவட்டம் மழையம்பட்டு கிராமம் தக்கா பகுதியில் இரு குடும்பத்தாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 12ம் வகுப்பு மாணவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீரப்பன் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவர் குடும்பத்தாருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வீரப்பன் மகன் விக்னேஷ் தனது வீட்டிற்கு அருகே உள்ள நிலத்தில் பசுமாட்டினை கட்டியுள்ளார். அப்போது சுப்பிரமணியனின் குடும்பத்தார் தங்கள் நிலத்திற்கு அருகே, எப்படி மாட்டை கட்டுவாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் இரு குடும்பத்தாருக்கும் இடையே மிகப்பெரிய தகராறாக மாறியுள்ளது. இந்த தகராறில் சுப்ரமணியன் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் சேர்ந்து, சிறுவன் விக்னேஷை தடியால் சரமாரியாக தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளார். உடனே சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போலீஸார் இது குறித்து தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.