Theft | Titan | கஸ்டமர் போல் வந்து.. `டைட்டன்’ ஷோரூமில் நிகழ்த்திய விபரீதம்
ஓசூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் டைட்டன் ஷோரூமில், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க கை கடிகாரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஷோரூமிற்கு கைக்கடிகாரம் வாங்குவது போல் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர், கைக்கடிகார மாடல்களை பார்ப்பது போல் நடித்து, அங்கிருந்த 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க கை கடிகாரத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.