"அவர்கள் சொல்லும் வார்த்தை ஈட்டியால் குத்துற மாதிரியே இருந்தது"தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னை ரிப்பன் மாளிகையில் 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை, நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவித்த நடிகை அம்பிகா, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியால் குத்துவது போல் உள்ளதாக கூறினார்.