அலையவிட்ட பத்திரப்பதிவு அதிகாரிகள் - திருப்பி தரமான சம்பவத்தை செய்த சாமானியன்
பத்திரப்பதிவு கட்டணத்தை திருப்பி வழங்காத அரசு அதிகாரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி தனக்கு சொந்தமான நிலத்தை மகன் பெயரில் பதிவு செய்ய கட்டணம் செலுத்திய நிலையில் , இடத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டுமென பதிவாளர் கிடப்பில் போட்டதால் வாங்கிய முத்திரைத்தாளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் தான் செலவு செய்த பணத்தை திரும்ப தரவேண்டுமென மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.