2 மணி நேரம் நிலவிய மின்வெட்டு- மக்கள்
திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூரில் 2 மணி நேரமாக நிலவிய மின்வெட்டால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மேல்பாக்கம், அண்ணனூர் உள்ளிட்ட இடங்களில் உயர் மின் அழுத்த கம்பிகள் எரிந்து சேதம் அடைந்ததே மின்வெட்டுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், பழுதை சீரமைத்து 2 மணி நேரத்தில் மின் விநியோகம் செய்தனர். இதனிடையே, அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.