சிபில் ஸ்கோர் சரிபார்ப்பை, ரிசர்வ் வங்கிக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். சிபில் ஸ்கோர் எனப்படும் கடன் பெறும் தகுதியை பன்னாட்டு நிறுவனமான சிபில் டிரான்ஸ் யூனியன் தீர்மானித்து வருகிறது. இதனால், கடன் வாங்கியவரின் சிபில் ஸ்கோர் ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்யப்பட்டு, வட்டி மாற்றப்படுகிறது எனவும், கடனே வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் மைனஸ் ஒன் வருகிறது எனவும் சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு வைத்துள்ளார். எனவே சிபில் ஸ்கோரை தீர்மானிக்கும் பொறுப்பு முன்பு இருந்தது போல் ரிசர்வ் வங்கியிடமே வரவேண்டும் என்று, அவர் வலியுறுத்தி உள்ளார்.