``நாங்க பேசுற பேச்சு இந்திகாரனுக்கு புரியல, கியா கியான்னு’’ போராட்டத்தால் டோல்கேட்டை அதிரவிட்ட தவாக
சுங்க கட்டணம் வசூலித்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியல்
வானகரம் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலித்ததை கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர், வானகரம் சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளனர். அப்போது வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்ததால் ஆத்திரமடைந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர், வாகனத்திலிருந்து இறங்கி சாலையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.