ரூ.2,500 பணத்திற்காக மூதாட்டி கொலை - எதிர்வீட்டு இளைஞர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னக்கொல்லியூர் கிராமத்தில் மூதாட்டியை கொலை செய்து தங்க கம்மல் மற்றும் பணத்தை கொள்ளையடித்த இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 10ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்து கிடந்த நிலையில், இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய போலீஸாருக்கு மூதாட்டி வீட்டின் எதிரில் உள்ள வீட்டில் வசிக்கக்கூடிய கணேஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. விசாரணையில் ஊர் சுற்றுவதற்கும், மது குடிப்பதற்கும் போதிய பணம் இல்லாததால் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரது பணப் பையை திருடிய போது, மூதாட்டி பார்த்து கூச்சலிட்டதால் அவரை கழுத்தை நெரித்து கொன்றதை கணேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.