திண்டுக்கல் மாவட்டம், மடூர் களத்துப்பட்டியில் உள்ள மஞ்சக்கம்மாள் - சலக்கெருது தாத்தன் கோயில் திருவிழாவில், மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி களைகட்டியது. இதற்காக கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்ளை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட நாட்டு காளைமாடுகள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து ஓடவிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு கோயிலின் சிறப்பு பிரசாதமான எலுமிச்சைப் பழம் வழங்கப்பட்டது.