மதுபோதையில் முதியவரை தாக்கிய இருவர் மீது பொதுமக்கள் தாக்குதல்
கோவையில், மதுபோதையில் முதியவரை தாக்கிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 65 வயது முதியவர் ராமசாமியை ரத்தம் சொட்டச் சொட்ட திவாகரன் மற்றும் விஜய் ஆகியோர் தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் அப்பகுதி மக்கள் பிடித்து, தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.