மாற்றுத்திறனாளி மாணவனுக்கு வீடு - நேரில் ஆணையை வழங்கிய ஆட்சியர்
கிருஷ்ணகிரி அருகே இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாணவனின் குடும்பத்தினருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வழங்கினார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இலவச வீட்டு மனை பட்டா ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து வீடு கட்டுவதற்கான பணிகளை ஆட்சியர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்..