ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. பெங்களூரு இன்று வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறுவதுடன், பிளே-ஆஃப் சுற்றுக்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிடும். சென்னை அணி ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சூழலில், பெங்களூருவிடம் அடைந்த முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.