தான் பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை.. “சாகும் வரை..“ கோர்ட் கொடுத்த அதிரடி தண்டனை
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது...
கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தந்தை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ. தமிழரசி, சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்..