`இந்த’ படிப்புக்கு மீண்டும் எகிறிய மவுசு.. 2 நாள் தான் டைம் இருக்கு.. 12th முடிச்ச மாணவர்களே டக்குனு ஒரு முடிவெடுங்க

Update: 2025-06-04 09:29 GMT

பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 450 பொறியியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கி உள்ளன. கடந்த ஏழாம் தேதி முதல் tneaonline.org என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 2 லட்சத்து 86 ஆயிரத்து 65 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு லட்சம் இடங்கள் வரை நிரப்பப்பட உள்ளன. இதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கால அவகாசம் வரும் 6 ம் தேதியுடன் முடிவடைகிறது..

Tags:    

மேலும் செய்திகள்