ஏலத்துக்கு வந்த சொந்த பைக்.."யாரும் வாங்க வேணாம்"..போலீஸ் காலில் விழுந்து கெஞ்சிய நபர் | Police
ராணிப்பேட்டையில் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விட்டபோது, தனது பைக்கை தனக்கே வழங்குமாறு உரிமையாளர்கள் கெஞ்சிய சம்பவம் அரங்கேறியது. மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 33 வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டன. அப்போது வாழைப்பந்தலை சேர்ந்த இளைஞர், தன்னுடைய நண்பர் மது வாங்கி சென்றபோது, போலீசாரிடம் பிடிபட்டதாக கூறி, போலீசார் காலில் விழுந்து கெஞ்சியதோடு, வேறு யாரும் ஏலம் எடுக்க வேண்டாம் என்றும் கை எடுத்து கும்பிட்டு கெஞ்சினார்.