பெற்றோர்கள் கவனத்திற்கு..! CBSE விவகாரம்... கல்வியாளர் சொல்லும் முக்கிய தகவல்

Update: 2025-02-15 15:09 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிபிஎஸ்இ பள்ளி அங்கீகாரம் பெறாததால் அப்பள்ளியில் படித்த மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சென்னையைச் சேர்ந்த கல்வியாளர் சதீஷ் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சிபிஎஸ்இ இணையதளத்தில் மாநில வாரியாக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பெயர் விவரங்களை பெற்றோர்கள் பார்த்து உறுதி செய்த பிறகு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் விவரங்களை தமிழக அரசே வெளியிட்டால் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்