ஆட்டம் காட்டிய ராட்சத முதலையை பிடித்த திக் திக் காட்சி

Update: 2025-07-10 03:45 GMT

மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனுர் கிராமத்தில் மழைநீர் தடுப்பணை குட்டையில் வலம் வந்த முதலையை பிடித்த வனத்துறையினர், அதனை பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் பத்திரமாக விட்டனர். சமீபத்தில், முதலை நடமாட்டம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், வனத்துறையினர் அங்கிருந்த முதலையை தேடி பிடிக்க மின்மோட்டார் மூலம் குட்டை நீரை வெளியேற்றினர். அதன் பிறகு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்ட முதலையானது, பவானிசாகர் அணை நீ்த்தேக்க பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்