Tasmac | Tasmac News | ஆத்திரத்தில் புதிய டாஸ்மாக் கட்டடத்தை சூறையாடிய பெண்கள்
புதிய டாஸ்மாக் கட்டிடத்தை சூறையாடிய பெண்கள்
திருவண்ணாமலை அருகே, புதிதாக பூஜை போடப்பட்ட அரசு மதுக்கடை கட்டிடத்தை கிராம பெண்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி அருகே உள்ள கீழ்பாக்கம் கிராமத்தில், புதிய மதுக்கடை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பூஜை போடப்பட்டது. ஏற்கனவே இப்பகுதியில் இரண்டு மதுபானக்கடைகள் அமைந்துள்ள நிலையில், கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், புதிய கட்டிடத்திற்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களை சூறையாடி, கட்டத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.