Salem Theft | என்னா வேகம்.. நொடியில் திருட்டு.. 1st ஒயின் ஷாப்.. Next மளிகை ஷாப்..!
சேலம், மேட்டூரில் மளிகை கடையில் மர்ம நபர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.எஸ் பகுதியில் உள்ள டாஸ்மாக்கிற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து 50 மது பாட்டில்களை திருடி சென்றனர். அதனையடுத்து அருகே இருந்த மளிகை கடையின் பூட்டை உடைத்து அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இந்த பகுதியில் தொடர்ந்து நடக்கும் திருட்டு சம்பவங்களால் அச்சமடைந்துள்ள வியாபாரிகள் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.