51 லட்சத்துக்கு ஆப்பிள் வாங்கி காஷ்மீர் வியாபாரிக்கு ஆப்பு வைத்த தமிழக நபர் !
காஷ்மீரைச் சேர்ந்த வியாபாரியிடம் 51 லட்சம் ஏமாற்றிய தர்மபுரியைச் சேர்ந்த நபரைக் காஷ்மீர் போலீஸார் கைது செய்தனர். பாலக்கோடு கோட்டை தெருவை சேர்ந்த பழ வியாபாரியான முகமது மற்றும் அதே பகுதியை சேர்ந்த அப்சல் முகமது இருவரும் சேர்ந்து, காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த ஆப்பில் வியாபாரி ஒருவரிடம் 51 லட்சத்திற்கு ஆப்பில் வாங்கியுள்ளனர். இதற்கான பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்த நிலையில், புகாரின் அடிப்படையில் பாலக்கோடு வந்த காஷ்மீர் போலீஸார் முகமதுவை கைது செய்தனர். மேலும் அப்சல்முகமதுவை தேடி வருகின்றனர்.