"ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்கும் திட்டம்" - அமைச்சர் தா.மோ.அன்பரசன் மெகா அறிவிப்பு

Update: 2025-04-09 14:44 GMT

"இந்தியாவிலேயே ஆதி திராவிடர், பழங்குடியினரை தொழில் முனைவோராக்கும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்"/"கைவினைக் கலைஞர்களுக்கு மானிய விலையில் கடன் வழங்கிடும் கலைஞர் கைவினைத் திட்டம்"/"ரூ.225 கோடி நிதியில், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்கும் திட்டம்"/"எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது"/"தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது"

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்துப் பேசிய அவர், 200க்கும் மேற்பட்ட உரிமங்களை தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் பெற்றிட ஒற்றை சாளர இணைய தளம் 2.O திட்டம், இந்தியாவிலேயே ஆதி திராவிடர், பழங்குடியினரை தொழில் முனைவோராக்கும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கைவினைக் கலைஞர்களுக்கு மானிய விலையில் கடன் வழங்கிடும் கலைஞர் கைவினைத் திட்டம், 225 கோடி ரூபாய் நிதியில், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்