சந்தேகத்திற்கு இடமான கார் - நள்ளிரவில் சென்னை ECR-ல் அதிர்ச்சி

Update: 2025-01-01 04:37 GMT

புத்தாண்டையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், நம்பர் பிளேட் இல்லாமல் சீறிப்பாய்ந்த காரை மடக்கிப் பிடித்தனர். அதிக சத்தம் எழுப்பும் சைலன்சரும் இருந்த‌தால், காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை சோதனை சாவடியில், மதுபோதையில் வாகனங்களில் வந்தவர்களை தடுத்த போலீசார், மாமல்லபுரம் செல்ல விடாமல் திருப்பி அனுப்பினர், விடுதிகளில் தங்குவதற்கான பதிவு ரசீது உள்ளவர்களை மட்டுமே அனுமதித்தனர்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி வழியாக உதகை செல்லும் சாலையில், உள்ளூர் வாகனங்களை மட்டுமே போலீசார் அனுமதித்த‌னர். வெளியூர் வாகனங்களை சோதனைச் சாவடியிலேயே திருப்பி அனுப்பினர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், விதிகளை மீறி வந்தவர்கள், அதிக சத்தம் எழுப்பி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்