சுற்றிவளைத்து மக்கள் கேட்ட கேள்வி - ``விட்டால் போதும்’’ என புறப்பட்ட மேயர்

Update: 2025-07-25 05:05 GMT

வேலூர் மேயரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட 34வது வார்டு பகுதியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை பார்வையிட்டு விட்டு புறப்பட்ட மேயர் சுஜாதாவை அங்கிருந்த பெண்கள் திடீரென சூழ்ந்து கொண்டு கால்வாய், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால், திகைத்து நின்ற மேயர் சுஜாதா, சாலை மற்றும் கால்வாய்க்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என கூறிவிட்டு, விட்டால் போதும் என்றபடி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்