வேலைவாய்ப்பு முகாம் திடீர் ரத்து- மாணவர்கள் அதிருப்தி

Update: 2025-04-06 14:34 GMT

சென்னையில், அரசு சார்பில் நடைபெறுவதாக இருந்த துணை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், அதிருப்தி அடைந்தனர். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிகாலையிலேயே ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு வந்திருந்தனர். ஆனால், வேலை வாய்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், முகாம் எப்போது நடைபெறும் என்று உறுதிப்படுத்தி அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்