பள்ளி மாணவனை வெறிகொண்டு துரத்திய தெருநாய்கள்.. கதறி ஓடிய சிறுவன் - நடுங்கவிடும் காட்சி
சென்னை ஆலந்தூரில் பள்ளி மாணவனை தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் வசிக்கும் பள்ளி மாணவனை 5 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் துரத்தி சென்றன. அதிஷ்டவசமாக அங்கு வந்த பொதுமக்கள் நாய்களை விரட்டியதால் சிறுவன் தப்பி ஒடினான். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை தெரு நாய்கள் துரத்தி சென்று கடிப்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.